விருதுகள்

திருவள்ளுவர் திருநாள் விழா


அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாளில் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

விருது பெறுவோர்க்கு விருதுத் தொகையாக ரூபாய் ஒரு இலட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகின்றன.

சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழா


மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சட்டத் திருத்தத்தால் நெடுங்காலமாகத் தமிழ் மக்களின் நம்பிக்கை, மரபு வழிவந்த முறைகளை மதித்து சித்திரைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு 13.4.2012 அன்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்நாளில், சிறந்த தமிழ் அமைப்புக்கும், சிறந்த சமூகத் தொண்டாற்றிய மகளிர் ஒருவர்க்கும், சிறந்த தமிழறிஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் சிறந்த தமிழ் அமைப்பிற்குத் தமிழ்த்தாய் விருது ரூ 5.00 இலட்சமும், கேடயமும் தகுதியுரையும் பிற விருதுகளுக்கு ரூ. 1.00 இலட்சமும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்பட்டன.